fbpx

முதலமைச்சரின் சகோதரி மருத்துவமனையில் அனுமதி..!! உண்ணாவிரதப் போராட்டம்..!! பெரும் பரபரப்பு..!!

தெலுங்கானாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வரின் சகோதரி சர்மிளா மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ரெட்டி தனியாக நடத்தி வருகிறார். இதற்கிடையே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி கடந்த மாதம் இறுதியில், காரில் புறப்பட்டு சென்றார். இதுபற்றி அறிந்த போலீசார் காரில் சர்மிளா அமர்ந்து இருந்தபோதே, அவரை வழிமறித்து காரை தூக்கிச் சென்றனர்.

முதலமைச்சரின் சகோதரி மருத்துவமனையில் அனுமதி..!! உண்ணாவிரதப் போராட்டம்..!! பெரும் பரபரப்பு..!!

இதனை தொடர்ந்து எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் சர்மிளா சிறை வைக்கப்பட்டார். தனது மகளை பார்ப்பதற்காக புறப்பட்ட சர்மிளாவின் தாயார் ஒய்.எஸ். விஜயம்மாவும் தெலுங்கானா போலீசாரால் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டார். இது தெலுங்கானா அரசியலில் பரபரப்புடன் பேசப்பட்டது. இதன்பின் சர்மிளா செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது கட்சிக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை சந்திரசேகர ராவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவருக்கு மாற்றான ஒரு நபராக சர்மிளாவை மக்கள் அங்கீகரிக்க தொடங்கிவிட்டனர் என்ற உண்மையால் அவர் நிச்சயம் பயந்து போயுள்ளார். கே.சி.ஆர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அவரால் ஆட்சிக்கு வர முடியாது என அவருக்கே தெரியும் என்று கூறினார். தொடர்ந்து, தனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரி கடந்த இரு தினங்களுக்கு முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். கோர்ட் அனுமதி உள்ளபோதும், போலீசாரின் அனுமதி பெறாத சூழலில், அம்பேத்கர் சிலை அருகே அவரை கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் போலீசார் அனுப்பி வைத்தனர்.

முதலமைச்சரின் சகோதரி மருத்துவமனையில் அனுமதி..!! உண்ணாவிரதப் போராட்டம்..!! பெரும் பரபரப்பு..!!

இதனை தொடர்ந்து, நேற்று 2-வது நாளாக வீட்டில் இருந்தபடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தெலுங்கானாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். எனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் கூறினார். இந்நிலையில், 3-வது நாளாக இன்று காலை அவரது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. எனினும், சற்று மயக்கமடைந்த நிலையில், ஒய்.எஸ். சர்மிளா உடனடியாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Chella

Next Post

#சேலம் :'நான் எனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் நான் செல்கிறேன் ' மனைவி கடிதத்தால் கணவருக்கு நேர்ந்த விபரீதம்..!

Sun Dec 11 , 2022
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திருவாக்கவுண்டனூரில் பூபதி மற்றும் சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற 1 ஆம் தேதி அன்று எனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் நான் செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து பூபதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரண்யா கண்ணன் என்பவருடன் சிலநாட்களாக வாழ்ந்து […]

You May Like