fbpx

தாலிக்கட்டும் நேரத்தில் மேடையிலிருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண்..!! காரணத்தை கேட்டா அதிர்ந்துபோவீங்க..!!

மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறி மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன் மணமக்கள் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பிறகு அழைத்து வரப்பட்ட மணமகன், மணமேடையில் வந்து அமர்ந்து உள்ளார். இந்நிலையில், மணமகளையும் உறவினர்கள் மணப்பந்தலுக்கு அழைத்து வந்துள்ளனர். மணமேடையில், மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்ய முடியாது என கூறி மேடையை விட்டு உடனடியாக இறங்கியுள்ளார்.

தாலிக்கட்டும் நேரத்தில் மேடையிலிருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண்..!! காரணத்தை கேட்டா அதிர்ந்துபோவீங்க..!!

அதுவரை, மணமகனை அந்த பெண் பார்க்கவில்லை என தெரிகிறது. இதனால், திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் காரணம் கேட்க, தனக்கு கருப்பு நிறத்தில் உள்ள மணமகன் வேண்டாம் என மணப்பெண் கூறியுள்ளார். இதனால், மணமகள் இல்லாமல் மணமகனின் உறவினர்கள் தனியாக திரும்பியுள்ளனர். இதன்பின்னர், மணமகளை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், மணமகள் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. கடைசி நேரத்தில் மணமகள் எடுத்த முடிவால் திருமணம் நின்று போனது, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வாரா? பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Mon Dec 12 , 2022
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டத்திலேயே மற்றொரு அறிவிப்பையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதாவது, விரைவில் தொண்டர்களின் ஒப்புதலுடன் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை […]

You May Like