fbpx

BB Tamil..!! பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் அந்த போட்டியாளர் இவர்தான்..!!

இந்த வாரம் நாமினேஷனில் தேர்வாகியுள்ள 6 பேரில் உறுதியாக இவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் 100 நாட்களை நெருங்க உள்ளதால் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் ராம் மற்றும் ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அந்த வகையில், இந்த வாரம் 6 பேர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர். இதில், மைனா நந்தினி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

BB Tamil..!! பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் அந்த போட்டியாளர் இவர்தான்..!!

மேலும், எல்லா வாரமும் நாமினேஷனில் இடம்பெறும் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் இந்த வாரமும் தேர்வாகியுள்ளனர். ஆனால், இவர்கள் இருவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதால் முதலில் இவர்கள் 2 பேரும் காப்பாற்றப்படுவார்கள். இவர்களைத் தொடர்ந்து அதிக ஈடுபாடு இல்லாத 4 பேர் தேர்வாகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து எல்லாத்திற்கும் ஒரே ரியாக்ஷன் கொடுக்கும் ரச்சிதா இந்த வாரம் தேர்வாகியுள்ளார். இவரைத் தொடர்ந்து ஜனனி, ஏடிகே மற்றும் மணிகண்டன் ஆகியோரும் இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர். அமுதவாணன், சிவின், தனலட்சுமி ஆகியோர் நாமினேஷனில் இடம்பெறவில்லை.

BB Tamil..!! பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் அந்த போட்டியாளர் இவர்தான்..!!

அந்த வகையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதில் மக்கள் மத்தியில் குறைந்த வாக்கு பெற்று மணிகண்டன் அல்லது ஏடிகே இவர்களுள் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் எப்போதுமே மணிகண்டன் ஒரு தலை பட்சமாக நந்தினிக்கு சப்போர்ட் செய்து வருகிறார். அதேபோல் ஏடிகேவும் தேவையில்லாத விஷயங்களுக்கு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆகையால் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்த இவர்களுள் ஒருவர் இந்த வாரம் வெளியேற உள்ளனர்.

Chella

Next Post

அரசியலில் குதிக்கிறார் லெஜெண்ட் சரவணன்? வெளியான அப்டேட்டால் பரபரப்பு!

Tue Dec 13 , 2022
சரவணா செல்வரத்தினம் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தான் சரவணன்.பொதுவாக இது போன்ற ஜவுளி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்த ஜவுளி நிறுவனங்களின் விளம்பரத்திற்காக பல பிரபலங்களின் உதவியை நாடி, அவர்கள் மூலமாக தங்களுடைய நிறுவனங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த விரும்புவார்கள். ஆனால் அப்படி பிரபலங்களின் உதவியை நாடினால் கடை உரிமையாளருக்கு நிச்சயம் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.இதையெல்லாம் நன்றாக உணர்ந்து கொண்ட தொழிலதிபர்தான் சரவணன். அதன் காரணமாகவே […]

You May Like