fbpx

நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை! ஆரம்பமானது பேருந்து பயணத்திற்கான முன்பதிவு!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் பொதுமக்களிடையே ஒரு புத்துணர்வு ஏற்படும். ஏனென்றால் பொங்கல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் தமிழக மக்கள் வேலை நிமித்தமாக எங்கே தங்கி இருந்தாலும், இந்த பண்டிகை காலங்களில் மட்டும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து நிம்மதியாக பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு தங்களுடைய வேலை நிமித்தமாக மீண்டும் வெளியூருக்கு செல்வார்கள்.

அப்படி பண்டிகையின் போது ஊருக்கு வரும் மக்களின் மனநிலை என்னதான் நகரம், நகரம் என்று நகர வாழ்வில் நாங்கள் மூழ்கி போனாலும் எங்களுடைய சொந்த ஊருக்கு வந்து, சொந்த மண்ணில் கால் வைத்து, சொந்த மண்ணின் காற்றை சுவாசிக்கும் போது எங்களுக்குள் ஒரு புத்துணர்வு பிறக்கிறது என்று இன்றளவும் வசனம் பேசும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வருபவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு விருப்பம் கொள்பவர்களுக்கு ரயில் முன்பதிவு தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.

அத்துடன் பண்டிகை தினங்களின்போது முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பயண சீட்டுகள் அனைத்தும் காலியாகி விடும், ஆகவே காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும். வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இது ஒரு புறமிருக்க அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தற்சமயம் ஆரம்பமாகி உள்ளது. 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் இருக்கிறது. அந்த விதத்தில், ஜனவரி மாதம் 12ஆம் தேதி பயணம் செய்வதற்கு நேற்றைய தினம் முன்பதிவு தொடங்கியது.

பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே சொந்த ஊர்களுக்கு போக வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள் நேற்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, வரும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் இன்றைய தினம் முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி முன்பதிவு செய்ய விரும்புவார்கள் http://tnstc.comஎன்ற இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

இந்த முக்கிய தினங்களில் 144 தடை உத்தரவு..!! மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed Dec 14 , 2022
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1ஆம் தேதி அன்று புத்தாண்டையும் முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை தினங்களை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் ஊரடங்கு […]

You May Like