இந்த பிரபஞ்சத்தில் ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் பணக்கார கடவுள்களில் முதன்மைக் கடவுளாக கருதப்படுபவர் திருப்பதி ஏழுமலையான் தான்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்த கோவிலில் வரும் வருமானத்தை வைத்து தான் ஆந்திர அரசாங்கமே இயங்குகிறது என்ற பேச்சும் ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் இருக்கத்தான் செய்கிறது.
இந்த கோவிலில் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கிறார்கள். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
அதன் பிறகு அங்கிருந்து பேருந்து மூலமாக ஸ்ரீ காளகஸ்தி கோவிலுக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் பேருந்தில் அவருக்கு அருகில் ஒரு இளம் பெண் வந்து அமர்ந்ததாக சொல்லப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த இளம் பெண் அந்த பக்தரிடம் லாபகமாக பேச்சுக் கொடுத்திருக்கிறார்.
வெகு நேரம் இருவரும் தங்களுடைய குடும்ப விவகாரங்கள் தொடர்பாகவும், மற்ற விஷயங்கள் தொடர்பாகவும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். காலகஸ்தி பேருந்து நிலையத்தை சென்றடைந்த உடன் சற்று நேரம் லாட்ஜில் ஓய்வெடுத்து விட்டு கோவிலுக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளார் அந்த இளம் பெண்.
அவர் ஆசையுடன் அழைத்ததால் வருவதற்கு அந்த பக்தரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் அருகில் இருந்தால் லாட்ஜ் ஒன்றுக்கு சென்று அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது பிரசாதம் என்று தெரிவித்து அந்த பக்தருக்கு மயக்க மருந்து கலக்கப்பட்ட லட்டுவை வழங்கி உள்ளார். அதனை சாப்பிட்ட சற்று நேரத்தில் அந்த பக்தர் மயக்கத்திற்குள்ளானார்.
அதன் பிறகு கண்விழித்து பார்த்த சமயத்தில் 6 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை அந்த இளம் பெண் இவரிடமிருந்து திருடி சென்றது தொடர்பாக தெரியவந்தது. ஆகவே அதிர்ச்சிக்குள்ளான அந்த பக்தர் காலகஸ்தி காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாட்ஜில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.