fbpx

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் “மக்களுக்கு எதுவும் செய்து தர முடியவில்லை” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில்தான் புதுச்சேரிக்கு அந்தஸ்து கோரி போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்சாமியை சந்தித்து, இந்த கோரிக்கை தொடர்பாக மீண்டும் வலியுறுத்தினர்.

அப்போது, அந்த குழுவினர் முன்பாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி “கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு இன்னும் கிடைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் யாருக்காவது ஏதாவது செய்து தர வேண்டும் என்றால் முடியவில்லை. தினமும் மன உளைச்சல்தான். இதற்கு ஒரே தீர்வு மாநில அந்தஸ்து மட்டுமே ஆகும்” என்று பேசினார்.

Kathir

Next Post

4 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது!!! மத்திய அரசு தகவல்

Sat Dec 17 , 2022
நாடு முழுவதுமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகளும், தொழிலாளர்கள் தொடர்பான 1667 வழக்குகளும், 487 தேர்தல் வழக்குகளும், 2870 பொதுநல வழக்குகளும், 1295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் 69,781 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 53,51,284 வழக்குகளும், மாவட்ட […]
இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு..!! 72 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது..!!

You May Like