சிறுமியிடம் இப்படி சொல்வதும் பாலியல் தொந்தரவு தான்.. மும்பை நீதிமன்றம் அதிரடி..

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2015-ம் ஆண்டு, 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.. ஃபிரெஞ்சு டியூஷன் வகுப்புகளுக்கு செல்லும் போது அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று, பலமுறை அவரிடம் ‘வா வா’ என்று அழைத்துள்ளார்.. இது சில நாட்களுக்கு தொடர்ந்த நிலையில், அந்த மாணவி, அருகில் இருந்த ஆண்களிடம் உதவி கோரி உள்ளார்.. அவர்கள் அந்த இளைஞரை துரத்த முயன்ற போது, அவர் தப்பி ஓடிவிட்டார்.. பின்னர் நடந்த சம்பவங்களை தன் டியூஷன் ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் அந்த மாணவி கூறியுள்ளார்.

மேலும் அதே இளைஞர், தனது பக்கத்து கட்டிடத்தில் இரவு காவலாளியாக வேலை செய்வதைக் கண்டு தனது தாயிடம் கூறினார். உடனடியாக அந்த தாய் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் அவரை 2015, செப்டம்பரில் கைது செய்தனர்.. பின்னர் மார்ச் 2016 இல் ஜாமீன் பெற்றார்.. எனினும் அவர் அதன்பின்னர் சிறை தண்டனையை அனுபவிக்கவில்லை..

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையில் இருந்து விலக்குக் கோரி, குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.. அதில், தனக்கு மனைவி மற்றும் மூன்று வயது குழந்தை இருப்பதாகவும், தான் ஒரு ஏழை என்றும் குறிப்பிட்டுள்ளார்.. இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், சிறுமியைப் பின்தொடர்வதும், தனக்கு விருப்பம் இல்லை அந்த சிறுமி என்று தெளிவாக கூறியும், பலமுறை அவளிடம் ‘வா வா..” என்று சொல்வதும் பாலியல் துன்புறுத்தல் தான் என்று தெரிவித்துள்ளது.. மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தும் உத்தரவிட்டுள்ளது..

Maha

Next Post

”இதோ வந்துட்டேன்”..!! குதூகலத்தில் விராட் கோலி..!! அசந்துப்போன டிராவிட்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

Sun Feb 19 , 2023
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டியின் போது பெவிலியன் திரும்பிய விராட் கோலி தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிடிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த போது சாப்பாடு வந்துவிட்டதாக ஒருவர் வந்து சொல்ல உடனே குதூகலமாகியிருக்கிறார் விராட். இந்த நிகழ்வின் வெறும் 8 நொடிகள் கொண்ட வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியின் […]
”இதோ வந்துட்டேன்”..!! குதூகலத்தில் விராட் கோலி..!! அசந்துப்போன டிராவிட்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

You May Like