ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு டீ-ஆக்டிவேட் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காவிட்டால், ரூ.10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு உங்கள் ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்.
அதற்கு முதலில் income tax துறையின் incometaxindiaefiling.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று பார்க்கவும். அதில் இடது பக்கம் quick link என்பதில் link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஒரு புதிய பக்கத்தில் click here என்ற ஹைபர்லின்க் செய்யப்பட்ட விருப்பம் கிடைக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு புதிய பக்கத்தில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைக்கான இணைப்பு கேட்கும். அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.