பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய BF.7 வகை கொரோனா தொற்று பரவல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். அதில், “பொது இடங்களில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை மூத்த குடிமக்கள் எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டம் மிகுந்த பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோளா பரிசோதனைகளை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

ஆக்சிஜன் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும். முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்றார்.
Work From Home…

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த கொரோனா ஒருவருக்கு ஏற்பட்டால், அவர் மூலம் 17 பேருக்கு பரவக்கூடியது என கூறப்படுகிறது. இதனால், மத்திய-மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் கடந்த காலம் போலவே, இந்த முறையும் பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை “Work From Home” மூலம் பணி செய்ய உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.