மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு இணங்க, இந்திய 4ஜி சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. 31-03-2022 அன்று 6,000 தளங்களுக்கான பர்சேஸ் ஆர்டரை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு, பிஎஸ்என்எல் தனது 1 லட்சம் 4ஜி தளங்களுக்கான டெண்டரை அக்டோபர் 2022 இல் வெளியிட்டது. 23.10.2019 அன்று, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-க்கான மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.
தன்னார்வ ஓய்வுத் திட்டம் (விஆர்எஸ்), இறையாண்மை உத்தரவாதப் பத்திரங்களை உயர்த்துவதன் மூலம் கடன் மறுசீரமைப்பு, மூலதன உட்செலுத்துதல் மூலம் 4ஜி சேவைகளுக்கான அலைக்கற்றை நிர்வாக ஒதுக்கீடு, முக்கிய சொத்துக்களின் பணமாக்குதல் மற்றும் கொள்கையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் இணைப்புக்கு ஒப்புதல் ஆகியவற்றுடன் பணியாளர்களின் செலவினங்களைக் குறைக்க இது ஒப்புதல் அளித்தது.