காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2, மண்டேலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பாலாஜி மோகனும், ஏழாம் அறிவு, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், யூடியூபில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். பிறகு அந்த பதிவையும் நீக்கியுள்ளார். இது குறித்து இருவரும் பேசாத நிலையில், பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்பிகா கணேஷ் மீது வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுவில், நான் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை கடந்த ஜனவரி 23-ம் தேதி திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், வெப் சீரீஸ்களில் நடிக்கும் தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ் என்பவர், எங்கள் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யூடியூபில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். அவதூறு கருத்துகளை வெளியிட்டதற்காக ரூ.1 கோடி வழங்க கல்பிகா கணேஷ் வழங்க வேண்டும்” என மனுவில் கோரியிருந்தனர். இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க கல்பிகா கணேஷ்க்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு ஜனவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி கல்பிகா கணேஷுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.