அதிசய குழந்தை.. 50000 குழந்தைகளில் ஒன்று..!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ஏனெனில் குழந்தையின் உடலில் 60% அடர்த்தியான முடி உள்ளது. அதாவது, முடி முதுகு முழுவதும் மற்றும் முன்புறம் சிறிது பரவி காணப்படுகிறது. முடியைத் தவிர, அப்பகுதியில் ஒரு கருப்பு படலமும் உள்ளது. அந்த படலத்தில் தான் இந்த கருமையான முடி வளர்ந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை தோல் மருத்துவர் இக்ராம் உசேன் பரிசோதனை செய்தார். 

அப்போது இது ஒரு அரிய வகை குறைபாடு என்று கண்டுபிடிக்கப்பட்டது. டாக்டர் இக்ராம் ஹுசைன் கூறுகையில், “தோலுக்கு நிறத்தை கொடுக்கும் மெலனோசைட்டுகளில் உள்ள அரிய வகை குறைபாட்டால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் “Giant congenital melanocytic nevus” என்பார்கள்.

இது ஒரு அரிய குறைபாடு. உலகில் பிறக்கும் ஐம்பதாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்தக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.  உடலில் இருக்கும் இந்த கருப்பு படம் வெறும் நிறமல்ல. இது ஒரு ‘பேட்ச்’. அதாவது கடினமான சருமம் போல் தெரிகிறது. 

இது புற்றுநோயாக இல்லாவிட்டாலும், இந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பிற்காலத்தில் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது. மேலும், இந்த ‘பேட்ச்’ முதுகெலும்பை அழுத்துவதால், மூளையும் அழுத்தத்தில் உள்ளாகிறது. இதனால் தலைவலி, வாந்தி பிரச்னை ஏற்படும்,” என்றும் கூறியுள்ளார்.

Baskar

Next Post

#சென்னை: வரதட்சணை கேட்டு அடித்த கணவர்.. விபரீத முடிவு எடுத்த மனைவி..!

Sun Jan 1 , 2023
சென்னை போரூர், காரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முத்துச்செல்வன். இவரது மனைவி ராவணம்மா. வீட்டு வேலை செய்து வருகிறார். இத்தம்பதியின் மகள் நிவேதா (வயது 23). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி சங்கர். ஷங்கரும் நிவேதாவும் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். நிவேதாவுக்கு வரதட்சணையாக 12 சவரன் நகைகளும் ரூ.15 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு கொடுத்த வரதட்சணை போதாது […]

You May Like