fbpx

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – களையிழந்த கிறிஸ்மஸ் பண்டிகை…

அமெரிக்காவைப் பொறுத்தவரைக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தான் முக்கியம். அங்குக் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை விடுப்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கிப் படையெடுப்பார்கள். அமெரிக்காவில் இந்த தலைமுறையில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்போது அங்கு கடும் குளிர் நிலவும் நிலையில், பல பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியுள்ளது.


கடுமையான பனிப்பொழிவால் பல பகுதிகள், மின்சாரம் இல்லாமல் இருளிலும் முடங்கியுள்ளது. இந்த கடுங்குளிரால் பல இடங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டு, 2000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முக்கிய நெடுஞ்சாலைகளும் கூட மூடப்பட்டுள்ளதால், சாலை வழியாகவும் கூட அங்குச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட விரும்புவோர் நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் கிளம்புமாறு அமெரிக்க அதிபர் பைடனே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Kokila

Next Post

இளைஞர்களின் வங்கிக் கணக்கில் திடீரென டெபாசிட் ஆன கோடிக்கணக்கான பணம்..!! அதிர்ச்சியில் வங்கி நிர்வாகம்..!!

Sun Dec 25 , 2022
இளைஞர்கள் இருவரின் வங்கிக் கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அரிம்பூர் பகுதியில் நிதின் மற்றும் மனு ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் வங்கிக் கணக்கில் திடீரென எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த பணம் தங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நினைத்து நிதின் மற்றும் மனு ஆகியோர் பணத்தை ஆடம்பரமாக […]

You May Like