தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித், சூர்யா என்று அவர் ஜோடி சேர்ந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்றே சொல்லலாம்.
இவர் கடந்த 2006 ஆம் வருடம் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, சென்ற 2015 ஆம் வருடம் வெளிவந்த 36 வயதினிலே திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் திரைத்துறைக்கு திரும்பினார்.
அதோடு தற்சமயம் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், நடிகை ஜோதிகா தன்னுடைய தாய், தந்தையுடன் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.