கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நேற்று மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் பகிருமாறு அப்போது அவர் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். கொரோனா சிகிச்சையின் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுவதாக அவர் கூறினார்.
ஊகத்தின் அடிப்படையிலான தகவல்களை பகிர வேண்டாம் என்றும் துல்லியமான தகவல்களை மட்டும் மக்களுக்கு தெரிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். உலகளவில் கொவிட் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்கும் வகையில் சரியான தகவல்கள் பகிரப்படுவது நமது பொறுப்பு என்றார்.