fbpx

ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை!!! அரசு ஊழியர்கள் இதை மட்டும் செய்தால் போதும்?

அதன்படி அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் யாரெல்லாம் சொந்த தொழிலை தொடங்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என்ற திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும், விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தை பயனப்டுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் துறை சார்ந்த தலைவரே ஊழியர்களுக்கான இந்த விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவார். மேலும் அரசு ஊழியர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், நிறுவனங்களை நடத்துவதற்கும் யுஏஇ அரசு உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் பல புதிய நிறுவனங்களும், பல்வேறு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என முன் வைக்கப்பட்டு அந்நாட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதாக ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஆகியோர் தெரிவித்து உள்ளார்கள். மேலும் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட துபாய் ஆட்சியாளர் சேக் முஹம்மது, “இன்று சுய தொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாதி ஊதியமும், வேலை உறுதியுடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த இளைஞர்கள் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Kathir

Next Post

பெரும் சோகம்..!! பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்..!! பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..!!

Fri Dec 30 , 2022
பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான வல்லபனேனி ஜனார்தன் காலமானார். அவருக்கு வயது 63. டோலிவுட் இயக்குநர்களில் தனது படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர் வல்லபனேனி ஜனார்தன். இவர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர். 63 வயதான இவர், கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வல்லபனேனி ஜனார்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு உடல்நிலை மோசமடைந்த காரணத்தால், ஜனார்தன் […]
பெரும் சோகம்..!! பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்..!! பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..!!

You May Like