ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி மத்திய, மாநில அரசு வழங்கும் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதேபோல ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு 20 கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப்படும் பொழுது அதில், 15 கிலோ அரிசி மத்திய அரசாலும் மீதமுள்ள 5 கிலோ அரிசி மாநில அரசாலும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசிக்கு ஒரே ரசீது கொடுக்கப்பட்டு வருவதால் மக்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் பொருளானது சரியாக சென்றடைகிறதா? என்பதில் குழப்பம் எழுந்துள்ளது.

இதனால், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி மத்திய, மாநில அரசு வழங்கும் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் 1ஆம் தேதிக்கு மேல் ரேஷன் கடையில் அரிசி வாங்கும் நபர்கள் கட்டாயம் மத்திய, மாநில அரசு வழங்கும் அரிசிக்கு தனித்தனியே ரசீது கொடுக்காவிட்டாலும் கேட்டு வாங்கி கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இந்த விதிமுறையை கடைபிடிக்காமல் பழைய முறையில் விநியோகம் செய்து வந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.