வெளிநாட்டவர்கள் கனடா நாட்டில் சொத்துக்கள் வாங்குவதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த வருடம் மட்டும் வீட்டின் விலைகள் சுமா 20% உயர்ந்தது. அதன் மூலம் வீட்டின் வாடகையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கனடாவில் உள்ளவர்கள் சொந்த நாட்டிலேயே சொத்துக்கள் வாங்குவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், கனடா அரசு சொத்துக்களின் இந்த அதிரடி விலையை குறைக்கும் விதமாகவும், சொந்த நாட்டினருக்கு உதவும் வகையிலும் வெளிநாட்டவர்கள் கனடா நாட்டில் சொத்துக்கள் வாங்குவதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கென புதிய சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இனி கனடாவில் வெளிநாட்டினர் யாரும் எந்த ஒரு சொத்துக்களையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடை கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக கனடாவில் வசித்து வருபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் அந்நிய நாட்டின் முதலீட்டாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் என்று பலரும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவிப்பது குறிப்பிடத்தக்கது.