பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலி மந்திரவாதி பெண் ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த பிரச்சனையால் மனவேதனை அடைந்துள்ளார். இதனால், அங்கிருந்த மந்திரவாதி ராஜா ஷேக்கை நாடி சென்றுள்ளார். அப்போது அந்த மந்திரவாதி உனக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதால் அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அந்த பெண்ணை ராஜா ஷேக் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது, அந்த பெண்ணை வீட்டில் வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மந்திரவாதி மிரட்டியுள்ளார். ஆனால், அதையும் மீறி அந்த பெண், நடந்தவற்றை காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்து புகார் அளித்தார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலி மந்திரவாதி ஷேக் ராஜாவை கைது செய்த காவல்துறையினர், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் வழக்குப்திவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.