fbpx

ரங்கராஜ் பாண்டே வீட்டில் நடந்த சோகம்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்…

பிரபல செய்தி தொலைக்காட்சியில் விவாதங்கள் மூலம் பிரபலமடைந்தவர் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே. இவர் பத்திரிகையாளர் மட்டுமன்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பு கவனம் பெற்றது. தற்போது யு-டியூப் சேனலை நடத்தி வருகிறார்.

ரங்கராஜ் பாண்டேவின் தந்தையார் நேற்றைய தினம் மரணமடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், அந்த பதிவில் “என் திருத்தகப்பனார் ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா (ராம்சிங்ஹாசன் பாண்டே) நேற்று, வைகுண்ட ஏகாதசி, திங்கள் கிழமை, மார்கழி 18, 02.01.2023 இரவு 9:45 மணிக்கு ஆசார்யன் திருவடி அடைந்தார். அன்னாரது காரியங்கள் சென்னையில் செவ்வாய் கிழமை நடைபெற இருக்கின்றன” என தெரிவித்தார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ராம் சிங்காசன் மறைந்ததை ஒட்டி அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Kathir

Next Post

சக மாணவர்கள் முன்பு கல்லூரி மாணவி குத்திக் கொலை..!! அடுத்த நிமிடமே தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Tue Jan 3 , 2023
கல்லூரி வளாகத்தில் மாணவியை வாலிபர் ஒருவர், சரமாரியாகக் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரிசிடன்சி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லயஸ்மிதா என்ற மாணவி பி.டெக் படித்து வந்துள்ளார். மாணவியைப் பார்ப்பதற்காக நேற்று மதியம் அவரின் கல்லூரிக்குப் பவன் கல்யாண் என்ற வாலிபர் வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென்று அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த […]
சக மாணவர்கள் முன்பு கல்லூரி மாணவி குத்திக் கொலை..!! அடுத்த நிமிடமே தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like