fbpx

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது ’வாரிசு’ ட்ரெய்லர்..!! ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது ’வாரிசு’ ட்ரெய்லர்..!! ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்..!!

இந்நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், “வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு சன் டிவி யூ-ட்யூப் சேனலில் வெளியாகும். சீ ‘யு’ சூன்” என படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை குறிப்பிட்டனர். இன்று ட்ரெய்லர் வெளியாகும் என்பதால், விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். காலை முதலே சோஷியல் மீடியாக்களில் வாரிசு படத்தை ட்ரெண்டு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த பொங்கலுக்கு துணிவு படமும் ரிலீஸ் ஆகவுள்ளதால் கடும் போட்டியாக வாரிசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் துணிவு ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று வாரிசு ட்ரெய்லரின்போது ரிலீஸ் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

காதல் திருமணம்..!! இளைஞரின் வீட்டை தீவைத்து கொளுத்திய பெண்ணின் சகோதரர்..!! பகீர் சம்பவம்..!!

Wed Jan 4 , 2023
காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் வீட்டிற்கு மணமகள் குடும்பத்தினர் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசூராபாத் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வீட்டில் இருந்ததால், இருவரும் வெமல்வாரா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சஞ்சனாவின் தம்பி பாலையா ராஜசேகரின் வீட்டிற்கு நண்பர்களுடன் […]
காதல் திருமணம்..!! இளைஞரின் வீட்டை தீவைத்து கொளுத்திய பெண்ணின் சகோதரர்..!! பகீர் சம்பவம்..!!

You May Like