’எடப்பாடிக்கு துணையாக செயல்படுவேன்’..!! பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்..!!

பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது திமுக-பாஜகவுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் டாக்டர் சரவணன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

’எடப்பாடிக்கு துணையாக செயல்படுவேன்’..!! பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்..!!

இந்நிலையில், சென்னையில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்டுள்ள சரவணன், ”2023 புத்தாண்டு தொடக்கத்தில் அதிமுகவில் என்னை இணைந்துக் கொண்டேன். வரக்கூடிய காலங்களில் கட்சி வலுப்பெற எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக செயல்படுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

புத்தாண்டில் நண்பர்களுடன் கும்மாளம் போட்ட கணவன்! தட்டிக்கேட்ட மனைவி படுகொலை!

Wed Jan 4 , 2023
பொதுவாக பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வந்தால் அது திருமணம் ஆனவர்கள் ஆனாலும் சரி திருமணம் ஆகாமல் இளைஞர்களாக இருப்பவர்களும் சரி அந்த பண்டிகையை நண்பர்களுடன் கொண்டாடுவதற்கு தான் விரும்புவார்கள். அது நியாயமும் கூட. ஆனால் அந்த கொண்டாட்டம் எல்லை மீறினால் பல வகையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது. அந்த வகையில், சென்னை தண்டையார்பேட்டையையடுத்த கருணாநிதி நகரில் வசித்து வந்தவர்கள். நந்தகுமார் பபிதா தம்பதியினர் […]
murder

You May Like