சிஸ்கோ 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் சேவை நிறுவனமான சிஸ்கோ அமெரிக்காவின் பே ஏரியா பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் முக்கியமாக அதன் சான் பிரான்சிஸ்கோ அலுவலகங்களில் சுமார் 80 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்ட “வரையறுக்கப்பட்ட வணிக மறுசீரமைப்பின்” ஒரு பகுதியாக தொழில்நுட்ப நிறுவனம் மொத்தம் 673 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் சிஸ்கோ நிறுவனமும் டெக் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்த அமேசான், சேல்ஸ்போர்ஸ், மெட்டா, ட்விட்டர், உபர் மற்றும் பிற டாப் டெக் நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.
“அதன் தலைமையகத்தில், இரண்டு சிஸ்கோ துணைத் தலைவர்கள் உட்பட 371 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிஸ்கோ நிறுவனத்தின் Milpitas அலுவலகத்தில் 222 டெக் ஊழியர்கள், ப்ரைமரி இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை இந்த பணிநீக்க நடவடிக்கையில் நிறுவன பணியில் இருந்து நீக்கியுள்ளது. இருப்பினும், சிஸ்கோ அதிக பணிநீக்க சுற்றுகளை நடத்துமா என்பது தெளிவாக இல்லை.
நெட்வொர்க்கிங் மேஜர் அதன் பணியாளர்களில் 4,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூறப்படுகிறது. அதன் உலகளாவிய ஊழியர்களில் 52 சதவீதத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவிற்கு வெளியே உள்ளனர்.