15 பேர் கைது… உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்…! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியைச் நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Vignesh

Next Post

2023-ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை.‌‌..! முழு தேதி பட்டியல் இதோ....!

Tue Nov 8 , 2022
2022-23ஆம் ஆண்டிற்கான 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்குத்தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்கள், விடைத்தாளில் உள்ள தகவல்களை சரிபார்த்து பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தேர்வுகள் காலை 10.15 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணி வரையில் […]

You May Like