இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபல விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காகவே அந்த விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதோடு, இந்த வீட்டில் நாள்தோறும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன்.6 90 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது என்று கவலைப்படுவதா? அல்லது குக் வித் கோமாளி சீசன் 4 வரப்போகிறது என்று நினைத்து சந்தோஷப்படுவதா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
தற்சமயம் இந்த வாரம் கடைசி எலிமினேஷன் நடக்கவிருக்கிறது. இந்த வாரம் இந்த வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தற்போது வரையில் சர்ப்ரைஸாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரச்சிதா மகாலட்சுமி இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததிலிருந்து கொண்டாட்டத்திலேயே இருக்கிறார். சமீபத்தில் அவருடைய அம்மா ஒரு சூப்பரான சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதனை கண்ட ரச்சிதாவும் சர்ப்ரைஸ் ஆகியுள்ளார்.