fbpx

ஏகே 62 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஓடிடி நிறுவனம்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஏகே 62 படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. துணிவு படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஓடிடி நிறுவனம்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

இந்நிலையில், ஏகே 62 படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Chella

Next Post

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி ரூ.8,000..!! வெளியான புதிய தகவல்..!!

Mon Jan 16 , 2023
நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல், 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆஆம் தேதி வரை […]

You May Like