ஒன்பது வயது சிறுமி உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வசித்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, சண்டையிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால், அவளை விடாமல் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.
அத்துடன், அந்த இழிவான செயலை வீடியோ பதிவு செய்து வைத்து, சம்பவத்தை வெளியே கூறினால் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த தனது குடும்பத்தினரிடம், பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறை சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதனிடையில் அந்த இரு சிறுவர்களும் வீட்டைவிட்டு தப்பி சென்று தலைமறைவாக உள்ளனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக மதுரா காவல் ஆய்வாளர் சோடே லால் தெரிவித்துள்ளார்.