ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது..
ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அகவிலைப்படி விகிதம் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது.. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வரும் 31-ம் தேதி, மத்திய தொழிலாளர் அமைச்சகம், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை (ஏஐசிபிஐ) வெளியிட உள்ளது.. கடந்த நவம்பர் மாதத்தின் AICPI புள்ளிவிவரங்கள் 132.5. ஆக இருந்தது.. டிசம்பர் மாதத்திற்கும் ஒரே மாதிரியான குறியீட்டு எண்கள் இருந்தால், அகவிலைப்படி 3% உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, தற்போது 38 சதவீதமாக அகவிலைப்படி, 41 சதவீதமாக அதிகரிக்கும்.
41 சதவீதமாக கொண்டு DA 3% உயர்த்தி அரசாங்கம் அறிவித்தால் எவ்வளவு சம்பளம் உயரும்..? குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் வாங்கும் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.10,800 சம்பள உயர்வு கிடைக்கும்.. .அதிகபட்ச அடிப்படை சம்பளம் 56,900 ரூபாய் வாங்கும் அரசு ஊழியருக்கு ரூ. 20,000 வரை சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கபடுகிறது..