fbpx

அட அவரா இவர்…..? அச்சு அசலாக நயன்தாராவை போலவே மாறிய குழந்தை நட்சத்திரம்….!

தமிழ் திரை உலக ரசிகர்களாலும், முன்னணி கதாநாயகர்களாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருபவர் தான் நயன்தாரா.இவருக்கு சென்ற ஒரு வருடத்திற்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்து சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

இவருடைய நடிப்பில் கடைசியாக கனெக்ட் என்ற திரைப்படம் வெளியானது. மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து, இறைவன், நயன்தாரா 75, ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களை தன்வசம் வைத்திருக்கிறார் நயன்தாரா.

நயன்தாராவிற்கு மகளாக 2 முறை நடித்திருந்தவர் நடிகை அனிகா. தமிழில் வெளியான விசுவாசம் மற்றும் மலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்திலும் அனிகாவிற்கு தாயாக நயன்தாரா நடித்திருப்பார்.

இந்த நிலையில், சமீபகாலமாக அணிகா வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அச்சு அசலாக நயன்தாரா போலவே அனிகாவும் இருக்கிறார் என்று தெரிவித்து வருகிறார்கள். அதனை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்திருக்கிறார்.

அப்படியே நயன்தாராவை போலவே இருக்கின்ற அனிகா அதே போன்ற ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார்.அந்த போட்டோ சூட்டின் புகைப்படங்களை இணையதளத்தில் தற்சமயம் காண முடிகிறது. இதோ அந்த புகைப்படம்.

Next Post

விரைவில் வருகிறது அரண்மனை-4….! கதாநாயகன் யார் தெரியுமா….?

Sat Jan 21 , 2023
பிரபல இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அரண்மனை இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து, 2016 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் வெளியானது. அந்த திரைப்படத்தின் 2ம் பாகமும் மாபெரும் வெற்றியை கண்டதால், அதன் வெற்றிக்கொடுத்த உற்சாகத்தில் சென்ற வருடம் அரண்மனை திரைப்படத்தின் 3வது பாகம் வெளியானது. இந்த நிலையில், அரண்மனை திரைப்படத்தின் 4வது பாகத்தை இயக்குவதற்கு சுந்தர் சி […]

You May Like