பிரபல இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அரண்மனை இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து, 2016 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் வெளியானது.
அந்த திரைப்படத்தின் 2ம் பாகமும் மாபெரும் வெற்றியை கண்டதால், அதன் வெற்றிக்கொடுத்த உற்சாகத்தில் சென்ற வருடம் அரண்மனை திரைப்படத்தின் 3வது பாகம் வெளியானது.
இந்த நிலையில், அரண்மனை திரைப்படத்தின் 4வது பாகத்தை இயக்குவதற்கு சுந்தர் சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கான பணிகளில் இயக்குனர் சுந்தர் சி முழுமூச்சாக இறங்கி உள்ளதாக தெரிகிறது.
அத்துடன் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க வைப்பதற்கு சுந்தர் சி முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதியும் இதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மிக விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.