fbpx

அடித்தது ஜாக்பாட்..!! அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் அட்டகாசமான சலுகைகள்..!! என்னென்ன தெரியுமா?

மக்கள் தொகையை உயர்த்தும் வகையில், ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் இந்திய மக்கள் தொகை, இரண்டாவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் அம்மாநிலத்தில் மக்கள் தொகையை உயர்த்த புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது. அங்கு 2011 கணக்கெடுப்பின் படி 6,10,577 பேர் என்ற அளவிலேயே மக்கள் தொகை உள்ளது. பட்டப்படிப்பு முடித்த 52 சதவீத பெண்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்வதாகவும், பட்டப்படிப்பு படிக்காத 36 சதவீத பெண்கள் இரண்டு அல்லது 3 குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகவும் மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்து குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த வேண்டி இருப்பதாகவும், சிக்கிம் மாநிலத்தின் கலாசாரம், மொழி ஆகியவற்றை இழக்காமல் இருக்க மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகிறது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் ஒரு குழந்தைக்கும் அதிகமாக பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார். பெண் ஊழியர் ஒருவர் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், 3-வது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் அளிக்கப்படும் என இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சிக்கிம் அரசு. குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் ஊழியர்கள் ஒரு வருட காலம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், புதிதாக தந்தையாகும் ஆண்களுக்கு 30 நாட்கள் விடுமுறையும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, சிக்கிம் மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு சிறப்பு நிதி உதவியும், கருத்தரித்தலில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு ஐ.வி.எப். எனப்படும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காகும் செலவில் 3 லட்சம் ரூபாய் வரை நிதி உதவியும் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய இளம்பெண்..!! கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!!

Wed Jan 25 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனால். இவர், பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டுக்கு சனா என்ற பெண் வாடகைக்கு குடிவந்துள்ளார். அவர் அதே வீட்டின் மேல் தளத்தில் தங்கியிருந்தார். அப்போது சோனலுக்கும், சனாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். பின்னர், மிகவும் நெருக்கமாக பழகுவதை அறிந்த சோனாலின் குடும்பத்தினர் ஒருவரையொருவர் விரும்புவதை ஏற்காததால், சனாவை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு […]
காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய இளம்பெண்..!! கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!!

You May Like