fbpx

உஷார்!… பறவைக்காய்ச்சல் தாக்கம் எதிரொலி!… உடனே தெரிவியுங்கள்!… மாநில அரசுகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Bird flu: கோழி உள்ளிட்ட பரவைகளில் திடீர் மரணம் குறித்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

‘ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா’ என்று அறியப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸின் எச்சங்கள் அமெரிக்கச் சந்தைகளில் விற்கப்படும் மாட்டுப்பாலில் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ், கன்சாஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் H5N1 வைரஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் நேரடியாக விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்றாலும், ஏப்ரல் மாதம் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட மாடுகளோடு நேரடித் தொடர்பில் இருந்த பண்ணைப் பணியாளர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்தன.

இதேபோல், கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் கடந்த மாதம் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் கோழிகள் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, கேரளத்தை ஒட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பும், சோதனையும் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் விடுக்கப்பட்டன.

இந்தநிலையில், கோழிகள் மற்றும் இதர வீட்டுப் பறவைகளுக்கு ஏதேனும் அசாதாரண மரணங்கள் தென்பட்டால் விழிப்புடன் இருக்குமாறும், கால்நடை பராமரிப்புத் துறையுடன் தகவல்களை உடனடியாகப் பகிருமாறும் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய நோய் கட்டுப்பாடு மையம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணைந்து வெளியிட்ட கூட்டு ஆலோசனையில், ”தற்போது இந்தியாவின் நான்கு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆந்திராவின் நெல்லூர், மகாராஷ்டிராவின் நாக்பூர், கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்கள் மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சி ஆகிய பகுதிகளின் கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் மற்றும் அதையொட்டிய பறவைகளின் இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (H5N1) தொற்றுநோயின் கிருமிகள் மனிதர்களுக்கும் பரவக்கூடிய சாத்தியம் இருப்பதால், இந்த நோய்த்தொற்றின் பரவலைக் குறைக்கவும், தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம்” என்றும் அந்த கூட்டு ஆலோசனை தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் வைரஸ் பொதுவாக புலம்பெயர்ந்த பறவைகளிடையே இயற்கையில் புழக்கத்தில் உள்ளது. மேலும் இந்த புலம்பெயர்ந்த பறவைகள் கோழிகளுடன் தொடர்பு கொள்ளும்போது, வளர்ப்பு கோழிகள் மத்தியில் வெடிப்பாக பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்பாகிறது.

அனைத்து கோழிப் பண்ணைகளிலும் விரிவான உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பண்ணைகளுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் கிருமிநாசினி மற்றும் பாதுகாப்பு ஆடைகளின் பயன்பாடு உட்பட கடுமையான சுகாதார நெறிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். காட்டுப் பறவைகள் மற்றும் வீட்டுக் கோழிகளுக்கு இடையேயான தொடர்பைத் தடுக்க வேண்டும்” என்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: 45 மணி நேர தியானத்தில் பிரதமர்..! அவசர அரசு வேலைகளை கையாள்வது யார்..?

Kokila

Next Post

உங்கள் காரில் கூலிங் அதிகமாக வரவில்லையா? அப்போ காரணம் இதுதான்!!

Sat Jun 1 , 2024
காரில் உள்ள ஏசியில் அதிகளவிலான கூலிங் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை ஏன் என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தாண்டின் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும் கூட, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறைபாடில்லை. வீட்டில் இருக்கும்போது […]

You May Like