தங்கம் விலை திடீர் சரிவு..!! ஆனாலும் ஷாக்கிங்தான்..!! எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,345-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,345-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.42,760-க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை, மாற்றமில்லாமல் நேற்றைய விலை படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

CHELLA

Next Post

விரைவில் மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம்... அமைச்சர் சொன்ன குட் நியூஸ்...

Wed Jan 25 , 2023
சென்னையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தாமதம் நிலவுவதாகவும் விரைவில் மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது “அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அதற்குரிய விவரங்களை நிதித்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் […]
anbil mahesh

You May Like