மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை பகுதியில் ஒரு பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். 14 வயதான அந்த சிறுமியின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் மாலையில் திடீரென ஒரு 25 வயது இளைஞர் நுழைந்து சிறுமி தனியாக இருப்பதை பார்த்து அவரிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
சிறுமி அணிந்திருந்த ஆடைகளை கிழித்து எரிந்துள்ளார். இதற்கு சிறுமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நபர் சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின், அந்த சிறுமியை கடுமையாக மிரட்டி எச்சரித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.
சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் தெரிவிக்க உடனே அவர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் அவர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு எஸ்கேப் ஆனது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு விவரங்களை விசாரித்து அவரை கண்டறிந்த போலீசார் ரயில் நிலையத்திலேயே அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அவர் ஓட முயற்சிக்க போலீசார் விடாமல் துரத்தி அவரை பிடித்துள்ளனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், குற்றம் இழைத்த மூன்று மணி நேரத்தில் அவர் கைது பட்டுள்ளார். போலீசாரின் இந்த நடவடிக்கை பொது மக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.