fbpx

4️ வயது சிறுவன் கொலை…..! 22 வயது இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம்…..!

நாளுக்கு நாள் இந்தியாவில் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது. அதாவது, சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பள்ளிக்கு செல்லும் மாணவனை ஆசிரியை பாலியல் வன்கொடுமை செய்வது, பள்ளிக்கு செல்லும் மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போதெல்லாம் ஒரு வித விரக்தி ஏற்படுகிறது.

அந்த வகையில், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இருக்கின்ற முண்டாமரே என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சென்ற செவ்வாய்க்கிழமை மாலை திடீரென்று காணாமல் போனார். சற்று நேரத்திற்கு பிறகு சிறுவனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவனை தீவிரமாக தேடி வந்தனர், அருகில் உள்ள சிறுவர்களை விசாரித்தார்கள். அவர்கள் காணாமல் போன சிறுவனை பக்கத்து வீட்டில் பார்த்ததாக அந்த சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

உடனே பெற்றோர் அருகே உள்ள வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த வீட்டு மாடியில் காணாமல் போன சிறுவன் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறான்.பதறிப்போன பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த 22 வயது உறவுக்கார வாலிபர் ஒருவர் திடீர் என்று தலைமறைவனார்.

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அந்த இளைஞர் மீது காவல்துறையிடம் புகார் வழங்கிய நிலையில், அந்த இளைஞரை காவல்துறையினர் தேடிப் பிடித்து கைது செய்தனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.

அந்த நபர் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞர் இன்ஜினியரிங் மாணவர் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் 4 வயது சிறுவனை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

அதன் பிறகு அந்த சிறுவன் நடந்த உண்மையை வெளியே சொல்லிவிட்டால் நாம் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து போன அந்த இளைஞர் அந்த சிறுவனை வீட்டு மாடியில் உள்ள இரும்பு கதவில் மோதி அடித்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.

உடற்கூறாய்வில் எப்படியும் உண்மை தெரிந்து விடும் என்று நினைத்த அந்த இளைஞர், தன்னுடைய குற்றத்தை காவல்துறையில் ஒப்புக்கொண்டார்.பின்பு கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்…..!, மனம் உடைந்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு….!

Thu Jan 26 , 2023
தற்போதைய இளம் தலைமுறையினர் காதல் என்று வந்துவிட்டால் கண் முன் தெரியாமல் ஆட தொடங்கி விடுகிறார்கள். காதலித்தால் நிச்சயமாக நிதானமாக இருக்க வேண்டும், அப்படி நிதானமாக இருந்தால் அனைத்தும் நல்லவிதமாக கைகூடும்.ஆனால் காதலிப்பவர்களிடம் நிதானம் என்பதை கொஞ்சமும் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்பதைப் போல ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே இருக்கின்ற கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சின்னதுரை சங்கரம்மாள் என்ற தம்பதியரின் மகளுக்கும், புதுப்பட்டியைச் சார்ந்த […]

You May Like