இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நியூ மார்க்கெட் ரோட்டில் மெக்டனால்டு துரித உணவகம் ஒன்று இருந்துள்ளது. அதில் ஷாபூர் மெப்தா என்ற அந்த நபர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சகோதரனை சந்தித்து நிறைய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து பில் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு காரை 90 நிமிடங்களுக்கு மேல் நிறுத்திய காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது அந்த அபராத தொகை 10,000 ரூபாய். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கேட்டதற்கு குறிப்பிட்ட 90 நிமிடங்களை தாண்டி நீங்கள் காரை பார்க் செய்து உள்ளீர்கள் எனவே அதற்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள்.
நீங்கள் மெக்டொனால்டுக்கு உள்ளே சென்றால் உங்களுக்கு சாப்பிட 90 நிமிடங்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என்று எங்கேயும் குறிப்பிடவில்லையே? நாங்கள் உணவை அதிகமாக ஆர்டர் செய்தோம் எப்படி சீக்கிரம் சாப்பிட முடியும்? ஹோட்டல்களுக்கு வருவதே ஆசுவாசமாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு தானே?” என்று அவர் கோபம் அடைந்துள்ளார்