fbpx

வானில் நிகழ்ந்த அதிசயம்..!! நீங்களும் இதை பார்த்தீங்களா..? வைரல் வீடியோ..!!

வானில் நட்சத்திரங்கள் தென்படும் நிலையில், ஜனவரி 18ஆம் தேதி இரவு ஒரு புதிய ஒளியும் தென்பட்டுள்ளது. அந்த ஒளியை ஹவாயில் உள்ள மௌனா கீ வான்காணகத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தால் இயக்கப்பட்ட சுபாரு-அசாஹி ஸ்டார் கேமராவால் படம் பிடித்தனர். இந்த வித்தியாச நிகழ்வை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட அந்த டைம்லேப்ஸ் வீடியோவின் இடது மூலையில் ஒரு பிரகாச ஒளி புள்ளியைப் போல சுழல்வதைக் காட்டியது. விரைவிலேயே புள்ளி ஒரு வில் போன்ற அம்சத்தை வெளியேற்றி, வானத்தில் ஒரு சுழலாக வளர்ந்து சற்று பெரியதாக மாறியது. இதைப்பார்த்த அனைவரும் சுழலும் அந்த ஒளி என்னவாக இருக்கும் என்று சிந்தித்து வருகின்றனர். வேற்று கிரக வாசிகள் அனுப்பிய விண்கலம் முதல் பிரபஞ்சத்தின் மற்றொரு பால்வெளி மண்டலம் வரை தங்களது கற்பனைக்கு எட்டிய அனைத்து பதில்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

உண்மை இதுதான்…

அதே நாளில் அமெரிக்க விண்வெளிப் படைக்கு உதவும் உலகளாவிய நிலைப்படுத்தல் செயற்கைக்கோளை (ஜிபிஎஸ்) ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் 9 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. அது சிறிது நேரத்திற்குப் பிறகு, ஹவாயில் இருந்து சுபாரு தொலைநோக்கி மூலம் சுழல் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. சுபாரு-அசாஹி ஸ்டார் கேமரா, ஹவாய் – மௌனகேயா பகுதியின் மீது கண்டா மர்மமான பறக்கும் சுழல் இந்த ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் ஏவியதுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. விண்ணில் செலுத்தப்பட்ட ஃபால்கன் 9 பூமியை நோக்கி திரும்பும் போது தனது எடையை குறைப்பதற்காக தேவையற்ற எரிபொருளை வெளியேற்றும். அப்படி அன்றைய இரவு விண்கலத்தின் திசையை நிலைப்படுத்த, அதன் மிக நீளமான அச்சில் சுழன்று கொண்டிருந்த நேரம் வெளியிட்ட எரிபொருள் பூமியின் வளிமண்டலத்துடன் கலந்து வினை புரியும் போது அது சுழலும் ஒளியாக தெரிந்துள்ளது என்று Spaceweather.com என்ற இணையதளம் விளக்கியுள்ளது.

Chella

Next Post

காதலி பிரிந்த ஆத்திரத்தில் அடுத்தடுத்து கொலை..!! அதிரவைத்த ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்..!!

Sun Jan 29 , 2023
சென்னை திருவல்லிக்கேணி, அண்ணா நகர், போரூர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட பட்டாகத்தி ரவுடி கும்பலின் தலைவனை பெங்களூருவில் வைத்துப் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் திருவல்லிக்கேணி, அண்ணா நகர் மற்றும் போரூர் பகுதிகளில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 8 பேர் கொண்ட கும்பல் மக்களை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்சென்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் போலீசில் சிக்கிய நிலையில், கும்பலின் தலைவன் இளங்கோ மட்டும் […]
காதலி பிரிந்த ஆத்திரத்தில் அடுத்தடுத்து கொலை..!! அதிரவைத்த ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்..!!

You May Like