கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மேகலபாரா பகுதியில் வலையில் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் உடலை மீட்டனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் பிலிப் கூறுகையில், “இரவில் கோழிப்பண்ணையிலிருந்து சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது கோழிப்பண்ணையில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் தொங்குவதை பார்த்தேன். கோழி கூட்டில் கிட்டத்தட்ட 100 கோழிகள் இருந்தன, அதன் கால் சிக்கிக்கொண்டது.
மேலும் சமீபகாலமாக இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிலிப் கூறினார். “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மாடு கொல்லப்பட்டது மற்றும் சமீபத்தில் ஒரு மனிதனின் நான்கு ஆடுகள் கொல்லப்பட்டன,” என்று அவர் கூறினார். வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுத்தையின் கால்களில் உள்ள காயங்கள் பெரிதாக இல்லை. சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுத்தைப்புலியின் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் அருண் ஜக்காரியா கூறியதாவது; சிறுத்தைப்புலியின் மரணம் மயோபதியால் ஏற்பட்டது என்றார். அதாவது கோழி கூண்டில் சிக்கிய பின்னர் சிறுத்தை மனரீதியாக துன்புறுத்தப்பட்டு இருந்ததாக கூறினார்.