ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோளாறு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஹைட்ராலிக் செயலிழந்ததாக கூறியதை அடுத்து கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இரவு 8.04 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இரவு 8.26 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என நிறுவனம் கூறியது. இதனால் ஓடுபாதையில் எந்த இடையூறும் ஏற்படவில்லை மற்றும் எந்த விமானங்களும் திருப்பி விடப்படவில்லை, என்றார்.
ஷார்ஜாவில் இருந்து IX 412 விமானத்தில் இருந்த 193 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆரே இந்தியா விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.