fbpx

தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பிப்ரவரி 1ஆம் தேதி இலங்கை கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பிப்.1ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா இலங்கைக் கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரூ. 53,600 சம்பளம்.. டிகிரி இருந்தால் போதும்.. LIC-ல் 300 காலியிடங்கள்..

Mon Jan 30 , 2023
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் 300 உதவி நிர்வாக அதிகாரி (ஏஏஓ) பணிகளுக்கான ஆட்சேர்க்கைக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. அதன்படி, இந்த பணிகளுக்கு விண்னப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜனவரி 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம். உதவி நிர்வாக அலுவலர்கள் தேர்வு செயல்முறை மூன்று சுற்றுகளை கொண்டது.. முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 17 மற்றும் பிப்ரவரி […]

You May Like