fbpx

85 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்….அமெரிக்காவில் நிகழ்ந்த சூவாரஸ்ய காதல்!

அமெரிக்காவில் 24 வயது இளம்பெண் ஒருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் மிஸிஸிப்பியின் ஸ்டார்க்வில்லே பகுதியை சேர்ந்தவர் மிராக்கிள் போக். 24 வயதே ஆன இவர், கடந்த 2019ம் ஆண்டு சலவைக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, 85 வயது முதியவர் சார்லஸ் போக் என்பவருடன் மிராக்கிளுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு, மிராக்கிளிடம் சார்லஸ் காதலை வெளிபடுத்தியுள்ளார். சார்லஸ் தனது தாத்தாவை விட 10 வயது பெரியவர் என தெரிந்தும் மிராக்கிள், அவரது காதலை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தன்னுடைய தாத்தாவைவிடவும் 10 வயது அதிகமான முதியவர் ஒருவரை இளம்பெண் காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

நீங்கள் ஜியோ பயனரா...சிறப்பு ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்...புதிய சலுகைகள் இதோ!

Sat Feb 4 , 2023
சிறப்பு வகை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஜியோ, அந்த திட்டத்தில் ரூ 895 ரீசார்ஜ் 1 வருட வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயனர்களை அதிகரிக்கவும், தங்களது பயனர்களை தக்கவைத்து கொள்ளவும், கவர்ச்சிகரமான புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது, ஜியோ நிறுவனம், பல்வேறு சிறப்பு வகை ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஜியோவின் ரூபாய் […]

You May Like