அமெரிக்காவைச் சார்ந்த டிக் டாக் புகழ் நிக் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் மீன் வளர்க்க வாடகை தருவதாக கூறி வெளியிட்ட வீடியோ இன்டர்நெட்டில் வைரலாக இருக்கிறது. அமெரிக்காவில் டிக் டாக் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் நிக். இவர் சமீபத்தில் வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றில் தான் மாதம் ஒன்றுக்கே 200 அமெரிக்க டாலர்களை வீட்டில் மீன் வளர்க்க வாடகையாக கொடுத்து வருவதாகவும் மேலும் மாதம் 15 டாலர்களை வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வைப்பதற்கு தனது வீட்டின் உரிமையாளர் தன்னிடமிருந்து வசூலிப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையதளங்களில் ரசிகர்களிடம் வைரல் ஆகி உள்ளது.
நிக்கி என்பவரை போலவே பல்வேறு நபர்களும் இதுபோன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காக தங்களது வீட்டு உரிமையாளர்களுக்கு மாத வாடகை செலுத்தி வந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. நிக் பதிவேற்றிய வீடியோவின் கீழ் மற்றொரு நபர் நானும் 150 டாலர்களை என்னுடைய செல்லப்பிராணிக்காக கொடுத்து வருகிறேன்என பதிவிட்டுள்ளார். சில நபர்கள் வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறெல்லாம் கட்டணம் பெறுகிறார்கள் என்பதை நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ஒரு நபர் மீன் வளர்ப்பதற்கெல்லாம் கட்டணமா ?? என்று பதிவிட்டு இருக்கிறார்.
மீன் வளர்ப்பதற்காக கட்டணம் வாங்கிய வீட்டு உரிமையாளர் என நெட்டிசன்கள் இந்த வீடியோவை கலாய்த்து வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் சில நபர்கள் மிகவும் நகைச்சுவையாக எங்கள் வீட்டில் நண்டு வளர்த்தோம் எங்கள் வீட்டின் ஓனர் நண்டு வளர்க்க வாடகை கேட்டார். அப்போது அதை நாங்கள் தின்று விட்டோம் என்று பதிவிட்டு தங்களது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்க மக்களிடம் பொதுவாகவே இது போன்ற விந்தையான குணங்கள் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அது மீன் வளர்ப்பதற்கு எல்லாம் வாடகை வசூலிக்கும் அளவுக்கு சென்று விட்டதா? என்பதுதான் நமக்கு மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. மனிதர்கள் தற்காலங்களில் எவ்வாறெல்லாம் காசு பார்க்க வழியை மேற்கொள்கிறார்கள் என்பதை நினைக்கும் போது இந்த உலகை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. இந்த வீடியோவை பதிவேற்றி டிக் டாக் இல் தனது புகழை மேலும் உயர்த்தியுள்ளார் நிக். இந்த ஒரு வீடியோவின் மூலம் ஏராளமான புதிய ரசிகர்கள் அவருக்கு கிடைத்திருக்கின்றனர். இதுவரை டிக் டாக்கில் ஏராளமானோர் அவரை பின் தொடர தொடங்கி இருக்கின்றனர். மீன் வளர்ப்பு கதையால் டிக் டாக்கில் பம்பர் அடித்திருக்கிறார் நிக்.