fbpx

கவனம்…! மார்ச் 31-க்குள் ஆதாருடன் இந்த ஆவணத்தை கட்டாயம் இணைக்க வேண்டும்…! இல்லையென்றால் சிக்கல்…!

பான் கார்டுடன் ஆதார் அட்டையை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை கடந்த இரண்டு மாதங்களில் வருமான வரித்துறை பலமுறை நீட்டித்துள்ளது. முக்கியமான ஆவணங்களை இணைப்பதற்கான கடைசி தேதி இப்போது மார்ச் 31, 2023 ஆகும். மார்ச் 31, 2023க்குள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்கத் தவறினால், உங்கள் பான் எண் செயல்படாத ஆக மாறிவிடும் என வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.

ஒரு வேளை இணைக்க தவறினால் ரூ. 1,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இன்னும் உங்கள் ஆதார் அட்டையை உங்கள் பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் செயலிழக்கும் முன், ரூபாய் 1,000 அபராதம் செலுத்துவதன் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம். கணக்கு இல்லையென்றால், உங்கள் பயனர் ஐடியாக உங்கள் PAN ஐ உருவாக்கி கடவுச்சொல்லை அமைக்கவும். நீங்கள் www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று இணைத்துக் கொள்ளலாம்.

Vignesh

Next Post

காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்...!

Tue Feb 7 , 2023
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மிதமான மழைக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 10-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

You May Like