தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில திரைப்படங்களை பொதுமக்களால் கடைசி வரையிலும் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படம். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போதும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜயின் காதலியாக நடித்திருந்தவர் தான் அஞ்சு அரவிந்த்.
இவர் பல மலையாள திரைப்படங்கள் நடித்திருக்கிறார் தமிழ் என்று எடுத்துக் கொண்டால் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ்மோர், வானத்தைப்போல என்று சில ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒரு சில படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
இவர் தேவதாஸ் என்ற நபரை கடந்த 2002 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். அதோடு இவர் 2004 ஆம் ஆண்டு தேவதாஸ் அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். அதன் பிறகு 2006 ஆம் வருடம் வினயச்சந்திரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு அன்விதா வினயன் என்ற மகள் இருக்கிறார்.