வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகை செய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’- தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 2,88,928 பேர் பலனடைந்துள்ளனர். இந்த்த் திட்டத்தின் கீழ் மாத வருமானம் ரூ.15,000-க்கு மிகாமல் பெரும் முதியவர்களுக்கு பயனளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துணை இணையமைச்சர் தநாராயணசாமி மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஆலோச மாநிலத்தில் 96207 பேர் பயன் பெற்றுள்ளனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 2,195 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.