தற்போது அனைவரின் வீடுகளிலும் கார் அல்லது பைக் உள்ளது. ஒரு வீட்டில் எத்தனை கார், எத்தனை பைக் உள்ளது என்பது அந்தந்த வீடுகளின பொருளாதார நிலைமையை பொறுத்தது.. பொதுவாக பலரும் வெளியே சென்றாலோ அல்லது அலுவலகத்திற்கு சென்றாலோ கார் அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.. ஆனால் ஒரு ஊரில் அனைவரின் வீடுகளிலும் விமானம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது உண்மை தான்.. அங்கு அலுவலகம் செல்வது முதல் குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிடுவது வரை இவர்கள் விமானங்களையே பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு ஊரில், அனைவரின் வீட்டின் முன்பும் விமானம் நிற்பதை பார்க்கலாம்.. அவர்கள் எங்கு செல்ல விரும்பினாலும், விமானத்தையே பயன்படுத்துகின்றனர்.. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது..
கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர் பார்க் என்று பெயரிடப்பட்ட இந்த இடம் பொதுவான ஊர்களில் இருந்து வேறுபட்டது. விமான நிலையத்தை அடைவதற்கு ஓடுபாதையாக பயன்படும் வகையில் இங்கு அகலமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே கேரேஜ் போன்ற ஹேங்கர்கள் உள்ளன.. அங்கு அவர்கள் தங்கள் விமானங்களை நிறுத்துகிறார்கள். மக்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் விமானத்தில்தான் செல்கிறார்கள். சுவாரஸ்யமாக, இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் விமானிகளாக உள்ளனர்.. எனவே அவர்களே தங்கள் சொந்த விமானத்தை ஓட்டுகின்றனர்.
அமெரிக்காவில் இதுபோன்ற 610 விமான பூங்காக்கள் உள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.. அங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விமானம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட விமானநிலையங்கள் மாற்றப்படாமல் குடியிருப்பு விமானப் பூங்காக்களாக மாறியது. இங்கு ஓய்வு பெற்ற ராணுவ விமானிகள் வசிக்கின்றனர். 1946 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மொத்தம் 4 லட்சம் விமானிகள் இருந்தனர், அவர்கள் இந்த விமான பூங்காக்களில் வாழத் தொடங்கினர். கேமரூன் பூங்கா 1963ல் உருவாக்கப்பட்டது. அங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளன. இங்கு சாலைகளுக்கும் விமானத்தின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளது.. மேலும், சாலைப் பலகைகளும் விமானத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளன..