விதிமுறைகளை மீறி மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஹெல்த் பிளஸ் உள்ளிட்ட 20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.. மளிகை பொருட்கள் தொடங்கி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன.. அந்த வகையில் மருந்துகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்நிலையில் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி மருந்துகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.. இதுதொடர்பாக அமேசான் மற்றும் பிளிப்கார் ஹெல்த் பிளஸ் உள்ளிட்ட 20 ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது..

அந்த நோட்டீஸில் “ ஆன்லைனில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் மருந்துகள் விற்பனைக்கு கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது.. இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும், 2019 மே மற்றும் நவம்பர் மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.. இருந்தாலும், உரிமம் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஆன்லைன் நிறுவனங்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது..
இந்த நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.. எந்தவொரு மருந்தின் விற்பனை அல்லது இருப்பு அல்லது காட்சிப்படுத்தல் அல்லது விற்பனை அல்லது விநியோகம் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட மாநில உரிமம் வழங்கும் அதிகாரத்தின் உரிமம் தேவை.. உரிமத்தின் நிபந்தனைகளை நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும்.. இந்த நோட்டீஸுக்கு எந்த பதிலும் இல்லை என்றால், இந்த விஷயத்தில் நிறுவனம் எதுவும் சொல்ல முடியாது என்று கருதப்படும் என்றும், அவர்கள் மீது எந்த அறிவிப்பும் இன்றி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Flipkart Health Plus நிறுவனத்தின் அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ இது டிஜிட்டல் ஹெல்த்கேர் சந்தை தளமாகும், இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு உண்மையான மற்றும் மலிவு விலையில் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை எளிதாகவும் வசதியாகவும் அணுக உதவுகிறது.
மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்து நோட்டீஸைப் பெற்றுள்ளோம், அதற்குத் தகுந்த பதிலளிப்போம். ஒரு அமைப்பாக, நாட்டின் சட்டங்களுக்கு இணங்கவும், எங்களின் செயல்முறைகள், சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்..” என்று தெரிவித்தனர்.