2030-க்குள் நாட்டில் சுமார் 2 கோடி மின்சார வாகனங்கள் இருக்கும் என்று சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்…
Electric mobility and future mobility என்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார்.. அப்போது “ 2030ம் ஆண்டுக்குள் நாட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் இருக்கும் என்று கூறினார். இது மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமின்றி, வேலைவாய்ப்பைப் பெருக்க உதவுவதோடு, இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்பம் மற்றும் பசுமை எரிபொருளின் விரைவான முன்னேற்றம் ஆகியவை காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும் பேசிய நிதின் கட்கரி, சுற்றுச்சூழல் துறையில் இருந்து சுமார் 40 சதவீதம் மாசு ஏற்படுகிறது என்றார். இதை குறைக்க, மின்சார பஸ்களை இயக்க வலியுறுத்த வேண்டும் என, அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் பசுமை இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம், குறைந்த எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.. தற்போது ஆண்டுக்கு சுமார் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான எரிபொருள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது..
பச்சை ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்கள் எதிர்கால தொழில்நுட்ப விருப்பமாக இருக்கும்… இந்த வாகனங்கள் நடுத்தர முதல் நீண்ட தூரம் வரை குறிப்பாக பெரிய கார்கள், பேருந்துகள், டிரக்குகள், கப்பல்கள் மற்றும் இரயில்களில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமானவை..” என்று தெரிவித்தார்.
தற்போது நாட்டில் 13.34 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் உள்ளன.. அவற்றில் பெரும்பாலான மின்சார வாகனங்கள் டெல்லியில் பயன்படுத்தப்படுகின்றன.. அதாவது சுமார் 1.56 மின்சார வாகனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.