fbpx

ஆசிரியர்களுக்கு அதிரடி கட்டுப்பாடு..!! செல்போன் பயன்படுத்த தடை விதிப்பு..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

பொதுத்தேர்வின்போது தேர்வு மையங்களில் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல், 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான விதிகள் குறித்து பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில் ஆசிரியர்களின் செல்போனை வைத்துவிட வேண்டும். தேர்வு அறைக்குள் எடுத்துச் சொல்லக்கூடாது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைத் தேர்வு மையங்களில் ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக வாட்ஸ் அப் பயன்படுத்துவதோ அதன் வழியாக தகவல்களை பரிமாறுவதும் குற்றம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதினாலும் ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள்..!! துடிதுடித்து உயிரிழந்த சோகம்..!! ரூ.2 லட்சம் அறிவித்தார் முதல்வர்..!!

Wed Feb 15 , 2023
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக உடற்கல்வி ஆசிரியருடன் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு வந்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற மாணவிகள் பின்னர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு […]

You May Like