fbpx

“உங்கள் வேலை நேரம் முடிந்து விட்டது. நீங்கள் வீட்டிற்கு செல்லலாம்” ஐடி நிறுவனம் அறிவித்த அன்பான எச்சரிக்கை!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனம் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் அதிகமான பணி சுமையினால் அவதிப்படுவதை தடுப்பதற்கு வித்தியாசமான ஒரு அணுகு முறையை கடைப்பிடித்து இருக்கிறது. இந்த அணுகுமுறை அவர்களது ஊழியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .அதாவது ஒருவரது பணி நேரம் முடிந்ததும் அவரது கணினி திரையில் உங்களது பணி நேரம் முடிந்து விட்டது இன்னும் பத்து நிமிடத்தில் உங்களது கணினி ஷட் டவுன் செய்யப்படும் நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்ற வாசகத்துடன் நட்பு ரீதியான எச்சரிக்கையை செய்தியாக அனுப்பி இருக்கிறது. இதனை புகைப்படம் எடுத்த அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய சமூகத்தில் வாசிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

இதற்காக ஆதரவாக பதிவிட்டுள்ள ஒருவர் ” இது போன்ற ஒரு வேலை நிறுவனத்தில் பணிபுரிவதை நான் மிகவும் விரும்புகிறேன் . இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் இரவு 7 மணிக்கு பிறகு நடைபெறும் திட்டமிடாத கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய தேவை இருக்காது இது சிறந்தது மற்றும் விரும்பத்தக்க செயல்”என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள மற்றொரு நபர் ” இது தொழில்நுட்பம் சாராத புற பயனாளர்களுக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கலாம். ஒரு ஐடி இன்ஜினியர் தன்னுடைய பணியை முடிக்கும் தருவாயில் இருக்கும் போது இதேபோன்று ஒரு நிகழ்வு நடந்தால் நீங்கள் உங்கள் தொழிலையே இழக்க வேண்டி வரும்” என்று தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார்”. இதனைப் பற்றி தனது கருத்தை பகிர்ந்து கொண்ட வேறொரு நபர் இது ஊழியர்களின் மீது தேவையில்லாத அழுத்தத்தை கொடுக்கும் ஒரு செயல் என பதிவிட்டு இருக்கிறார். இந்த நேரத்திற்குள் உங்கள் பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் எனும்போது வேலை சார்ந்த மன அழுத்தம் உங்களுக்கு அதிகமாக இதனால் ஏற்படும் என அவர் தனது கருத்தை பகிர்ந்து உள்ளார். எது, எப்படி? இருந்தாலும் இது போன்ற ஒரு நடவடிக்கை நிறுவனம் தங்களது ஊழியர்களின் மீது வைத்திருக்கும் அக்கறையை காட்டுவதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் தங்களது பணியை முடித்துக் கொண்டு அவர்கள் வீடு செல்வதன் மூலம் தங்களது உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியும்.

Rupa

Next Post

”ஏய் தலையெல்லாம் சுத்துது நிப்பாட்டுங்கப்பா”..!! குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த தாய்..!!

Thu Feb 16 , 2023
வாஷிங் மெஷினில் துணிகளோடு சேர்த்து குழந்தை துவைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லி மாநிலம் வசந்த்கன்ஞ் பகுதியில் சோப்பு தண்ணீர் நிரம்பிய டாப்-லோட் வாஷிங் மெஷினில் குழந்தை ஒன்று தவறுதலாக விழுந்துள்ளது. குழந்தை நாற்காலியில் ஏறி வாஷிங் மெஷினில் தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வீடு முழுவதும் தேடிய பிறகு, குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினுக்குள் மயங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு […]
”ஏய் தலையெல்லாம் சுத்துது நிப்பாட்டுங்கப்பா”..!! குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்த தாய்..!!

You May Like